திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தைப்புலி வாகன ஓட்டிகள் அச்சம்
Bhavanisagar King 24x7 |4 Oct 2024 4:52 AM GMT
திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தைப்புலி வாகன ஓட்டிகள் அச்சம்
திம்பம் மலைப்பாதையில் தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தைப்புலி வாகன ஓட்டிகள் அச்சம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், தாள வாடி, கேர்மாளம், ஆசனூர், தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதியில் புலி கள், சிறுத்தைப்புலிகள், யானைகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையும் உள்ளது.இந்த மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தைப்புலி சு படுத்திருந்தது. இதை கண்டதும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் சிறுத்தைப்புலியை தங்களுடைய செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்தில் சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது
Next Story