பனை விதைகளை நடவு செய்த கல்லூரி மாணவிகள்!

மடத்துக்குளம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சீலநாயக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி வேதியியல் துறை, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, துங்காவி ஊராட்சி மன்றம், டாக்டர் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து தமிழக அரசின் பனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் குளக்கரை ஓரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைவிதைகள் வேதியல் துறை மாணவிகள் நடவு செய்தனர். மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் பனை மரத்தின் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி, மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை அலுவலர் காவிய தீப்தினி , உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன், துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன், துணைத் தலைவர் பொன்னுத்தாய் தங்கராஜ், ஊராட்சி பிரதிநிதிகள், அமராவதி மரம் வளர்ப்போர் சங்கம். செயலாளர் எஸ். கோபாலகிருஷ்ணன்,டாக்டர் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை முனைவர் மா.மலர்விழி அவர்கள் வேதியல் துறை தலைவர் மற்றும் முனைவர் மு. இந்திராணி துணை பேராசிரியர் வேதியல் துறை மற்றும் திருமதி எல். ராஜேஸ்வரி, துணைப் பேராசிரியர் தமிழ் துறை சுயநிதி பிரிவு மற்றும் வேதியல் துறை தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவியர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story