மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!
Madathukulam King 24x7 |4 Oct 2024 10:21 AM GMT
மடத்துக்குளம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.. அருகில் உள்ள வேடபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முறைகேடாக அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையை திண்டுக்கல் மாவட்டத்தை போல அனைத்து விவசாயிகளுக்கும் தென்னைக்கு வட்ட பாத்தி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 100 கோடி ஒதுக்கி விரைவில் சீரமைத்து விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.. அதில் அரசு ஊழியருக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கியது விதிமீறல் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் 10 லட்சத்தை திரும்ப பெறப்படும் எனவும், முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளுக்கு எழுதிக் கொடுத்தனர்.. தொடந்து விவசாயிகளின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story