பார்க் கல்லூரியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘போலீஸ் அக்கா’ திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Palladam King 24x7 |4 Oct 2024 11:21 AM GMT
பல்லடம் டி.எஸ்.பி சுரேஷ் கலந்து கொண்டார்
கோவை மாநகர காவல் துறை சாா்பில் கல்லூரி மாணவிகளை பாதுகாத்திட போலீஸ் அக்கா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் உளவியல், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு மகளிர் காவலர் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டு மாணவிகளுடன் கலந்துரையாடுவது மற்றும் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் உள்ள பார்க் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்,பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாள்ர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு திட்டம் குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.மாணவிகள் காவலன் செயலியை தங்கள் போனில் எப்போதும் வைத்து கொள்ள வேண்டும்,யாராவது மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சித்தால் பயந்து கொள்ளாமல் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என டி.எஸ்.பி அறிவுரை வழங்கினார்.
Next Story