திமுகவில் இணைந்த பாஜகவினர்

திமுகவில் இணைந்த பாஜகவினர்
திமுகவில் இணைந்த பாஜகவினர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெரப்பன்சோலை ஊராட்சி பகுதியை சேர்ந்த வி.ராஜா தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட பாஜகவினர் தங்களது உறுப்பினர் அட்டையுடன் பாஜகவிலிருந்து விலகி நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான  கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,  முனனிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியத் திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கேபி.ராமசுவாமி, ஒன்றிய பொருளாளர் தன்ராஜ், மாவட்ட ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி எம்.கதிரவன், ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா சரவணன், கிளை செயலாளர்கள் பழனி, மோகன்குமார், குழந்தையன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story