மல்லசமுத்திரத்தில் தேங்காய்பருப்பு, நிலக்கடலை ஏலம்:

மல்லசமுத்திரத்தில் தேங்காய்பருப்பு, நிலக்கடலை ஏலம்:
மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் ரூ.3.60 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் 04/09/2024ல் நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 80 மூட்டைகள் வரத்து வந்தது. மதிப்பு ரூ 3.60 இலட்சம் ஆகும். முதல் தரம் 101.65 முதல் 123.75 வரையிலும் இரண்டாம் தரம் 75.10 முதல் 91.75வரையிலும் விலை தீர்ந்தது. மேலும் இன்று நடைபெற்ற நிலக்கடலை டெண்டரில் 30 மூட்டைகள் வரத்து வந்தது மதிப்பு 40 ஆயிரம் ஆகும் பட்டாணி ஈரப்பதம்(60 கிலோ) 2310/முதல் 2530/வரையிலும் விலை தீர்ந்தது அடுத்த நிலக்கடலை டெண்டர் 07/10/2024 திங்கட்கிழமை நடைபெறும்.
Next Story