உலக விலங்குகள் நல நாளை முன்னிட்டு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் துவக்கம்!

நமது முன்னோர்கள் பறவைகளை, விலங்குகளை நேசித்து இயற்கையோடு இணைந்து எளிமையாக உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தனர்.
அக்டோபர் 4 உலக விலங்குகள் நல நாளை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் கவிஞர் மகளிர் கல்லூரியில் சுற்றுச் சூழல் மன்றம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தலைமை தாங்கினார்.கணித துறை தலைவர் எம்னியாநவஜோதி முன்னிலை வகித்தார், சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் இலட்சுமி வரவேற்புரை ஆற்றினார் விழாவில் சிறப்பு விருந்தினராக பசுமை நாமக்கல் செயலாளர் பசுமை மா.தில்லை சிவக்குமார் பறவைகளுக்கு தண்ணீர் தானியங்கள் வைத்தல் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில் ....இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் விலங்குகளை துன்புறுத்தாமல் அவைகளை பாதுகாக்க வேண்டும் நமது முன்னோர்கள் பறவைகளை, விலங்குகளை நேசித்து இயற்கையோடு இணைந்து எளிமையாக உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தனர். மண்,நீர், காற்று இவைகளை மாசு படுத்தாமல் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் நெகிழி பயன்பாட்டை மாணவிகள் தவிர்த்து துணிப்பை,வாழை இலைகளை பயன்படுத்திட துவங்கிட வேண்டும், மேலும் வீடுகளில் காய்கறி தோட்டம் அமைத்திடல் வேண்டும் என கேட்டுக் கொண்டார். விழாவில் விலங்கியல் துறை தலைவர் சர்மிளாபானு மற்றும் சுற்றுச் சூழல் மன்ற மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக கல்லூரி மாணவி ரஞ்சிதா நன்றி கூறினார்.முன்னதாக கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் மன்ற மாணவிகள் பறவைகளுக்கு தண்ணீர் தொட்டி மற்றும் தானியங்கள் தொட்டிகளை தொங்க விட்டனர்.
Next Story