காங்கேயத்தில் சிறப்பு ஆதார் முகாம் - இந்திய அஞ்சல் துறை மற்றும் தனியார் ரோட்டரி அமைப்பும் இணைந்து நடத்தினர் 

காங்கேயம் ரோட்டரி கிளப் ஆனது இந்திய அஞ்சல் துறையின் திருப்பூர் அஞ்சல் கோட்டத்தின்  மூலம் திருப்பூர் தெற்கு அஞ்சல் உட் கோட்டத்திற்கு உட்பட்ட காங்கேயத்தில் தனியார்  ஆதார் முகாம் நடைபெற்றது. இந்த முகமானது இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நடைபெறும்.
காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகமை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மண்டல ஒருங்கிணைப்பாளர் பட்டாபிராமன் மற்றும் ரோட்டரி மாவட்ட ரவீந்திரன், ஆகியோர் தொடங்கிவைத்தனர். மேலும் அஞ்சல் துறையின்  சேமிப்பு கணக்கு மற்றும் ஆதார் சேவை குறித்து சிறப்பு உரையாற்றினார். மேலும் காங்கேயம் ரோட்டரி கிளப் தலைவர் செல்வராஜ்  தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த ஆதார் முகாமில் குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுத்தல், ஆதார் அட்டையில் தொலைபேசி எண் மாற்றுதல், முகவரி மாற்றம் செய்தல், கண்வழி மற்றும் கைரேகை புதுப்பித்தல் போன்ற அனைத்து ஆதார் சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த முகாமில்  அஞ்சல் துறையின் அனைத்து சேமிப்பு கணக்குகளும் தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்குதல், பொன்மகள் கணக்கு தொடங்குதல், போன்ற பணிகளும் மேலும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் கணக்கு, விபத்து காப்பீடு, மாணவர்களுக்கான கல்வி உதவி தொகைக்கான கணக்கு  , 100 நாள் வேலைக்கான கணக்கு போன்ற கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடு அஞ்சல் துறையால் செய்யப்பட்டுள்ளது.  இந்த முகாமில் இன்று சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து  கொண்டனர். 250 பொதுமக்கள் இன்று இந்த ஆதார் முகாமில் பயன் அடைந்தனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்பூர்  தெற்கு அஞ்சல் உட்கோட்டம் உதவி கண்காணிப்பாளர்  பழனி செய்திருந்தார் . மேலும் அஞ்சல் துறையின் சிறுசேமிப்பு கணக்கு குறித்தும் ஆதார் சேவை குறித்தும் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக காங்கேயம் ரோட்டரி செயலாளர் Er நல்லசிவம் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் செந்தில்குமார் நன்றியுரை ஆற்றினார்.  கூட்டத்தில் திரளான பொதுமக்களும் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் நாளை நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
Next Story