பனை விதை நடும் விழா
Komarapalayam King 24x7 |4 Oct 2024 4:18 PM GMT
குமாரபாளையத்தில் பனை விதை நடும் விழா நடந்தது
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒருங்கிணைத்த ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக தட்டாங்குட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேமங்காட்டுவலசு வாய்க்கால் கரையோர பகுதியில் பனை விதை நடும் பணி நடந்தது. தளிர்விடும் பாரதம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.சமூக ஆர்வலர் சித்ரா, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குமாரபாளையம் அரிமா சங்க தலைவர் ஆடிட்டர் சரவணகுமார், கொல்லிமலை பல்லூயிர் பாதுகாப்பு குழு பன்னீர்செல்வம், ஆகியோர் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தனர். சுற்றுசுழல் ஆர்வலர்கள் உஷா, ரவிச்சந்திரன், உதவி பேராசிரியர் சரவணகுமார், அன்பழகன், ராம்கி, பூபாலநவீன் உட்பட பலர் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தார்கள். செயலாளர் பிரபு நன்றி கூறினார்.
Next Story