புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலையில் அரிமா சங்கங்கள் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா!

அரிமா சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவில் சுண்டல், தினை மற்றும் ராகி மாவில் செய்த கொழுக்கட்டை, கம்பு உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை, அதிரசம், வாழைப்பழம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி (05.10.2024)நைனாமலை வரதராஜப்பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பன்னாட்டு அரிமா சங்கங்கள் (மாவட்டம் 324E) இணைந்து நடத்திய பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவில் சுண்டல், தினை மற்றும் ராகி மாவில் செய்த கொழுக்கட்டை, கம்பு உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை, அதிரசம், வாழைப்பழம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அரிமா சந்திரசேகரன் மற்றும் அரிமா மோகன் மற்றும் ஜிஎம்ஏ ஒருங்கிணைப்பாளர் அரிமா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத்தின் (நமது ஆரோக்கியம்) மாவட்டத் தலைவர் அரிமா சுந்தரராஜூ, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அரிமா.வீரக்குமார், அரிமா.ராஜ்குமார், அரிமா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்களுக்கு சிறுதானிய உணவுகள் வழங்கி சிறப்பித்தனர்
Next Story