புத்தக திருவிழாவில் மேல்மருவத்தூர் நூல் அறிமுக விழா
Thoothukudi King 24x7 |5 Oct 2024 9:05 AM GMT
தூத்துக்குடி புத்தக திருவிழாவில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தினமலர் பதிப்பகம் வெளியிட்ட மேல்மருவத்தூர் நூல் அறிமுக விழாவில் சப்.கலெக்டர் (பயிற்சி) த.சத்யா வெளியிட்டார்.
தூத்துக்குடி புத்தக திருவிழா சங்கரப்பேரி திடலில் நடைபெற்று வருகிறது. நேற்று 2வது நாள் விழாவில் முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கில் எழுத்தாளர் முகில், சாளை பஷீர் ஆகியோர் முன்னிலையில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய மேல்மருவத்தூர் எனும் நூலை சப்.கலெக்டர் (பயிற்சி) த.சத்யா வெளியிட்டார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் பெற்றுக்கொண்டார். மேல்மருவத்தூர் என்ற புத்தகத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மாவின் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகத்தில் பெண்களுக்கு அவர் அளித்த முன்னுரிமை, அவர் நடத்திய ஆன்மிக மாநாடுகள், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட செய்தது, ஜாதி, மதம், இனம் என்ற வேறுபாடின்றி சிகப்பு நிற ஆடை உடுத்தி உலகம் முழுவதிலும் ஆன்மிகத்தை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு சீரிய நடைமுறைகளை உருவாக்கி அதனை நடைமுறைபடுத்தியுள்ளார் என்பதனை விளக்கும் நூல். இந்த நிகழ்ச்சியில் காமராசு செல்வன் எழுதிய விடிலிக்காடு நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் காமராசு செல்வன், முத்தாலங்குறிச்சி காமராசு, ஓவியர் வள்ளிநாயகம், மாவட்ட நூலகர் முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர் முகில், சாளை பஷீர், சிற்பி பாமா, பயிற்சி சப் கலெக்டர் சத்யா ஆகியோர் பேசினார்கள். எழுத்தாளர் நெய்தல் ஆன்டோ, மாரிமுத்து, சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், துநிலை நூலகர் ராமசங்கர், ஓய்வு பெற்ற நூலகர் பிரமநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story