நெய்தல் கலை திருவிழா முன்னேற்பாடு பணிகள் : கனிமொழி எம்பி ஆய்வு
Thoothukudi King 24x7 |5 Oct 2024 9:18 AM GMT
தூத்துக்குடியில் 3வது நெய்தல் கலை திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் 3வது நெய்தல் கலை திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார். தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் அக்.11 ஆம் முதல் 13ஆம் தேதி வரை 3வது நெய்தல் கலைத் திருவிழா தொடங்கவுள்ளது. அதற்காக நடைபெற்றுவரும் முன்னேற்பாட்டுப் பணிகளை இன்று கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார். நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும்- மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்த விழா அக்டோபர் 11ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
Next Story