மலைக்கோவிலூர்- டூவீலர் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி முதியவர் படுகாயம்.
Karur King 24x7 |5 Oct 2024 9:59 AM GMT
மலைக்கோவிலூர்- டூவீலர் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி முதியவர் படுகாயம்.
மலைக்கோவிலூர்- டூவீலர் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், காந்திகிராமம், ஜேஜே கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் வயது 62. இவர் அக்டோபர் 3-ம் தேதி காலை 9:45- மணியளவில்,கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் மலைக்கோவிலூர் பகுதியில் உள்ள பாலத்தின் மீது செல்லும்போது அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு லாரி, வீரப்பன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்த வீரப்பனுக்கு வலது கை முட்டி, வலது கை மணிக்கட்டு, வலது தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத லாரி எது? அதன் ஓட்டுனர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story