பொறியாளர்களே வருங்கால இந்தியாவின் தூண்.நாட்டின் நலன் கருதி உயர்ந்த சிந்தனையோடும் நேர்மையோடும் செயல்பட வேண்டும்
Sholavandan King 24x7 |5 Oct 2024 10:27 AM GMT
சமுதாயத்தின் சவால்களை மாணவர்கள் மனதை ஒரு நிலையாக வைத்துஎதிர் கொள்ள வேண்டும்
மதுரை பரவையில் உள்ள மங்கையர்கரசி பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது கல்லூரியின் தலைவர் அசோக்குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். துணைத்தலைவர் பொறியாளர் சக்திபிரனேஷ் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் கேப்ஜெமினியின் துணைத் தலைவர் குருமூர்த்தி சேதுராமன் கலந்துகொண்டு அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து துறை மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார். மேலும் 290 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.தொடர்ந்து அவர் கூறுகையில் பொறியாளர்களே வருங்கால இந்தியாவின் தூண் என்றும் அத்தகைய பொறியாளர்கள் நாட்டின் நலன் கருதி உயர்ந்த சிந்தனைகளோடும் நேர்மையோடும் முனைப்புடனும் ஆற்றலும் அயராது பாடுபட வேண்டும் மாணவ மாணவிகள் தங்கள் துறையில் பிரகாசிக்க தொடர்ந்து புதிய விஷயங்களை அன்றாடம் கற்றுக்கொண்டு இருக்க வேண்டும் இல்லையென்றால் இந்த நவீன தொழில்நுட்ப உலகில் அவர்களால் செயல்படுவது சாத்தியம் இல்லை என்று கூறினார்.மேலும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட ரெனால்ட் நிசான் இந்தியாவின் துணைத் தலைவர் ஈவாஜேம்ஸ் கூறுகையில் இந்த சமுதாயத்தின் சவால்களை மாணவர்கள் மனதை ஒரு நிலையாக வைத்து எதிர்கொள்ள வேண்டும் மாணவர்கள் வெற்றி பெற மன உறுதியையும் சாதிக்க திறமையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story