பல்லடம் அருகே முன்னாள் அதிமுக கவுன்சிலர் மற்றும் அவரது மகனுக்கு மண்டை உடைப்பு.

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் கந்தசாமி.இவருக்கும் அருகே இருக்கும் சண்முகத்திற்கும் இடப்பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும் வட்டாட்சியர் மூலமாக கந்தசாமிக்கு 1.50 ஏக்கர் நிலமும், சண்முகத்திற்கு ஒரு ஏக்கர் நிலமும் பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சண்முகம் இறந்து விட்டதால் சண்முகத்துக்கு பாத்தியமான இடம் அவரது மகளான பிரியாவிற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பிரியாவின் கணவரான அசோக் கந்தசாமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அசோக் , கந்தசாமியையும் அவரது மகன் இளங்கோவையும் எதிர்பார்க்காத நேரத்தில் கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கந்தசாமி மற்றும் இளங்கோவை மீட்ட அக்கம் பக்கத்தினர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

