தென்னை மரத்தில் இடி விழுந்து தீ விபத்து.

X
Paramathi Velur King 24x7 |5 Oct 2024 7:41 PM ISTபரமத்தி வேலூர் அருகே தென்னை மரத்தில் இடி விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்து தீயணைப்புத் துறையினர் தடுத்தனர்.
பரமத்திவேலூர், அக்.5- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே நேற்று முன்தினம் தென்னை மரத்தில் இடி விழுந்து தீ விபத்து. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன்(52) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்றுமுன்தினம் இடியுடன் கூடிய மின்னல் ஏற்பட்டதில் தென்னை மரங்கள் மீது இடி விழுந்துள்ளது. இதில் தென்னை மரங்கள் தீப்பிடித்து வேகமாக தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து பாண்டியன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து உடணடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தென்னை மரங்களில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story
