இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்
Virudhachalam King 24x7 |6 Oct 2024 3:19 AM GMT
விருத்தாசலத்தில் நடந்தது
இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர். ராஜீவ் காந்தி விருத்தாச்சலம் ஒன்றிய தலைவர் ஜெயசீலன் மாவட்ட பொருளாளர் கணேசன், கம்மாபுரம் ஒன்றிய தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகரத் தலைவர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மங்கா பிள்ளை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று சதவிகித உள் ஒதுக்கீட்டால் மற்ற பட்டியலின மக்களின் கல்வி வேலை வாய்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும், பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதை நாடாளுமன்றமும் குடியரசு வேண்டும் தலைவரும் தீர்மானிக்க வேண்டும் என்கிற அரசியல் சட்ட நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கடை கடைபிடிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து இட ஒதுக்கீட்டினை பாதுகாக்க உள் ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம் மற்றும் தெருமுனை பிரச்சாரங்களில் ஈடுபடுவது. விருத்தாசலம் வட்டம் ரூபநாராயண நல்லூர் கிராமத்தில் முறையீடாக வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தியும் ரத்து செய்ய மறுக்கும் விருத்தாசலம் வருவாய்த் துறையினரை கண்டித்து வருகின்ற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் கலாமணி, விருத்தாசலம் ஒன்றிய துணை செயலாளர் ஜெயபால், மங்கலம்பேட்டை நகர தலைவர் கதிர்காமன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட விருத்தாசலம் கம்மாபுரம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் துணை செயலாளர் சுரேஷ், நன்றி கூறினார்.
Next Story