மணல் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் கண்டன பேரணி 

மணல் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து  மீனவர்கள் கண்டன பேரணி 
கிள்ளியூரில்
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட ஏழுதேசம், கொல்லங்கோடு உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து அரிய வகை மணல் அள்ளுவதற்கு இந்திய மணல் ஆலை  நிறுவனம் ஒப்பந்தம் போட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட கடற்கரை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்தை கைவிட வலியுறுத்தி  கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.         இந்த நிலையில் நேற்று (5ஆம் தேதி ) இரயுமன்துறை, பூத்துறை, தூத்தர், நீரோடி  உள்ளிட்ட 8 கடற்கரை கிராம பகுதிகளில் இருந்து அணு கனிம சுரங்க திட்டத்தை கண்டித்து மக்கள் கண்டன பேரணி நடத்தினார்கள்.        தொடர்ந்து சின்னத்துறையில் நடந்த பொதுக் கூட்டம் மைதானத்திற்கு பேரணி வந்தடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தூத்தூர் மறைவட்ட குருகுல முதல்வர் சில்வஸ்டார் குரூஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கடலோர  அமைதி மற்றும் வளர்ச்சி குழும இயக்குனர் டங்ஸ்டன் கலந்து கொண்டார். பூத்துறை ஜமாத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான், இந்து தண்டான் சமுதாய தலைவர அசோகன், ராஜேஷ்குமார் எம்எல்ஏ உட்பட கலந்து கொண்டு பேசினார்கள்.
Next Story