சாரண ஆசிரியர்களுக்கான அடிப்படை மற்றும் முன்னோடிப்பயிற்சி முகாம்

முன்னோடிப்பயிற்சி முகாமில் 17 பேரும், அடிப்படைப் பயிற்சி முகாமில் 18 பேரும் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த சாரண இயக்கப்பொறுப்பாசிரியர்களுக்கான அடிப்படை மற்றும் முன்னோடிப் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட சாரண இயக்கப்பயிற்சித்திடலில் நடைபெற்றது. மாவட்டக்கல்வி அலுவலர்(இடைநிலை) விஜயன் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இம்முகாமினைத் துவக்கி வைத்தார். பள்ளித்துணை ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கை.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னோடிப்பயிற்சி முகாமில் 17 பேரும், அடிப்படைப் பயிற்சி முகாமில் 18 பேரும் கலந்துகொண்டனர். இம்முகாமினைத் தேசியத் தலைமையகப் பாடத்திட்டத்தின் படி முன்னோடிப்பயிற்சி முகாம் தலைவரும் மாவட்டப் செயலருமான து.விஜய், அடிப்படைப் பயிற்சி முகாம் தலைவர் க.பாலசுப்ரமணியம், இரகோத்தமன், விஜயகுமார்,செந்தில் ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாக நடத்தியது. பயிற்சித்திடல் செயலாக்கக் குழுமச்செயலர் க.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற நிறைவுவிழாவில் சாரண ஆணையர்கள் வெ.தில்லைக்குமார், விநாயகா பாலசுப்ரமணியம், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (பொ)ரவிசெல்வம் (தொடக்கக்கல்வி) மரகதம் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு முகாம் செயல்பாடுகளைப் பார்வையிட்டு சிறப்புரையாற்றினர். மாவட்டத்தலைவர் முனைவர்.குணசேகரன், ஆணையர்கள் முனைவர் டி.ஒ.சிங்காரவேல்,முனைவர். சித்ராமோகன்,முனைவர்.வெற்றிச்செல்வன், முனைவர்.சாரதாமணி,சண்முகசுந்தரம், கே.எஸ்.பழனியப்பன்,இராமசந்திரன், இணைச்செயலர் ப.தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சத்தார்பாஷா, சு.கோபி,வி.தீபக், சி.மணியரசன் ஆகியோர் அடங்கிய குழு முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
Next Story