நைனாமலை அடிவாரத்தில் நெகிழி தடுப்பு விழிப்புணர்வு முகாம்!

நெகிழி இல்லா தமிழகம் இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாஜ் கண்ணன், நிகழ்வினை ஒருங்கிணைத்து காகிதப்பைகளை பொது மக்களின் பயன்பாட்டுக்காக இலவசமாக வழங்கினார்.
நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு நெகிழி இல்லா தமிழகம் இயக்கம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாகம், நாமக்கல் பசுமை காவலர்கள் இயக்கம், மற்றும் நெகிழி இல்லா நாமக்கல் இயக்கம், ஆகியோர் இணைந்து நடத்திய தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு நைனாமலை அடிவாரத்தில் நடைபெற்றது.நெகிழி இல்லா தமிழகம் இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாஜ் கண்ணன், நிகழ்வினை ஒருங்கிணைத்து காகிதப்பைகளை பொது மக்களின் பயன்பாட்டுக்காக இலவசமாக வழங்கினார்கள். புதுச்சத்திரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, முத்துலட்சுமி (வட்டார ஊராட்சி) மற்றும் (கிராம ஊராட்சி), தூய்மை பாரத இயக்க மாவட்ட திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் ராதாகிருஷ்ணன், சுந்தரராஜன், நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாக அலுவலர் கீர்த்தனா சுந்தர்ராஜன், நெகிழி இல்லா நாமக்கல் இயக்க தன்னார்வலர்கள் மாதேஸ்வரன், சின்னசாமி, திருக்கோயில் ஊழியர்கள் பங்கேற்று கடைக்காரர்கள், பொதுமக்கள், பக்தர்களுக்கு நெகிழிப் பைகளின் தீமைகளை எடுத்து கூறி காகிதப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Next Story