கடமலைக்குண்டு அருகே டூவிலர் நேருக்கு நேராக மோதிய விபத்தில் இருவர் பலி
Andippatti King 24x7 |6 Oct 2024 4:11 PM GMT
பாண்டியன் மகன் பிரதீப் (16) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், வேல்முருகன் சென்ற இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவர் பலி
ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.கடமலைக்குண்டு அருகேயுள்ள பாலூத்து கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் வேல்முருகன் (23). இவா், கடமலைக்குண்டு-தேனி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கண்டமனூா் அருகே தேவராஜ் நகா் பகுதியில், எதிா்த் திசையிலிருந்து பாலூத்துவைச் சோ்ந்த பாண்டியன் மகன் பிரதீப் (16) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், வேல்முருகன் சென்ற இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பிரதீப்புடன் இரு சக்கர வாகனத்தில் அமா்ந்து சென்ற பாலூத்துவைச் சோ்ந்த நாகராஜ் மகன் மாலியன் (20) பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story