தமிழ்நாடு அரசு சார்பில் ஆறுபடை வீடுகளுக்கு இலவசமாக செல்ல தேர்வு

தமிழ்நாடு அரசு சார்பில் ஆறுபடை வீடுகளுக்கு இலவசமாக செல்ல தேர்வு
தமிழ்நாடு அரசு சார்பில் ஆறுபடை வீடுகளுக்கு இலவசமாக செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆரணியில் இருந்து புறப்பாடு.
தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை சார்பில் ஆறுபடை வீடுகளான திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் ஆகிய ஆறு முருகன் ஸ்தலங்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தவர்களை ஆரணி தொகுதியிலிருந்து 12 நபர்களை தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை ஆரணியில் இருந்து திருவண்ணாமலை இந்து சமய அறநிலை துறையின் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அரசு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு பிறகு பஸ் மூலம் ஆறுபடை வீடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரணி பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை வருவாய் ஆய்வாளர் மணிகண்ட பிரபு, கோயில் செயல் அலுவலர் ஹரிகரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆர். சிவானந்தம், நகர மன்ற தலைவர் ஏ. சி. மணி, மேலாண்மை குழு உறுப்பினர் எஸ். எஸ் .அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் வி. ரவி, ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, எஸ்.மோகன், நகர சபை உறுப்பினர்கள் பலரும் வழி அனுப்பி வைத்தனர்.
Next Story