கடம்பூரில் மின்வேலியில் சிக்கி யானை பலி
Bhavanisagar King 24x7 |7 Oct 2024 2:35 AM GMT
கடம்பூரில் மின்வேலியில் சிக்கி யானை பலி
கடம்பூரில் மின்வேலியில் சிக்கி யானை பலி கடம்பூர் மலைப்பகுதியில் மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தி புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் அப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் விளைந்துள்ள கரும்பு, வாழை , ராகி உள்ளிட்ட பயிர்களை தின்றும் சேதப்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கடம்பூர் அடுத்த குத்தியாலத்தூர் ஊராட்சி மொசல் மடுவு பகுதியில் சுப்பிரமணி என்பவரது தோட்டது மின் வேலியில் சிக்கி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது உள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடம்பூர் வனத்துறையினருக்கும், போலீஸார்க்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற வனத்துறையினர், போலீஸார் மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் முறையாக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என வனத்துறையினர் அடிக்கடி ரோந்து சென்று ஆய்வுகள் செய்தால் இது போன்று யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் உயிரிழப்புகள் நிகழாதவாறு தடுக்கலாம் என்று வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story