உடுமலையில் கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு
Udumalaipettai King 24x7 |7 Oct 2024 2:39 AM GMT
நலவாரிய அட்டைகள் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு கார்னர் பகுதியில் கோவை மண்டல கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்க உடுமலை பகுதி தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா மாநில அமைப்பு செயலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜரின் முழு உருவச்சிலைக்கு சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . பின்னர் மாநில செயலாளர் மனோகரன் உடுமலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார் தொழிற்சங்க கொடியினை ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்க காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஏற்றி வைத்தார். உடுமலை நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கோ ரவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் நடைபெற்ற நிகழ்வில் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஆணை மற்றும் நலவாரிய அட்டைகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினரும் மாநில துணைத்தலைவருமான சேலம் கணேசன் மாநிலச் செயலாளர் ரமணி தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கப்பட்டன. நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம் கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் சங்கம் செயல் தலைவர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் நலவாரியம் சர்வர் முறையாக பராமரிக்க வேண்டும் கட்டுமான அமைப்பு சார தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.7000 வழங்க வேண்டும், வீடு கட்ட மானியம் எளிய நடைமுறை அமல்படுத்த வேண்டும் ,ஓய்வூதியம் பெரும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 10ம் தேதிக்குள் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது
Next Story