சிவன்மலை கிரிவலப் பாதையில் நடை பயிற்சி விழிப்புணர்வு
சிவன்மலை கிரிவலப் பாதையில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறையின் "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டத்தின் கீழ் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு சுகாதார நடைபயிற்சி நடைபெற்றது. தினசரி நடை பயணம் மேற்கொள்வதால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கேயம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் விஜயகுமார், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் உறுப்பினர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story






