கச்சிராபளையம்:கோவிலில் அம்மன் சிலைகள் சேதம்
Thirukoilure King 24x7 |7 Oct 2024 3:45 AM GMT
சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் உள் பிரகாரத்தில் விநாயகர், முருகர், பார்வதி, நவகிரகம் மற்றும் துர்க்கை அம்மன் சன்னதிகள் தனித்தனியாக உள்ளது. நவராத்திரியையொட்டி, துர்க்கை அம்மன் பிரகாரத்தில் கொலு பூஜை செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. நேற்று காலை வழிபாடு முடிந்து கோவில் அர்ச்சகர் காலை 9:00 மணியளவில் கோவில் நடையை மூடி சென்றுள்ளார். மாலை 6:00 மணியளவில் பூஜைக்காக கோவில் நடையை அர்ச்சகர் திறந்தார்.அங்கு, துர்க்கை அம்மன் பிரகாரத்தில் 16 கைகளுடன் அமைக்கப்பட்ட சிமென்ட் சிலையின் முகம் மற்றும் கைகள் மற்றும் அருகில் இருந்த துர்க்கை அம்மன் கற்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கோவில் உட்புற சுவற்றில் மாற்று மத கடவுளின் சின்னம் வரையப்பட்டிருந்தது. தகவறிந்து சம்பவ இடதிற்கு விரைந்து சென்ற கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் தலைமையிலான கச்சிராயபாளையம் போலீசார், விஷமத்தனம் செய்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சப் இன்ஸ்பெக்டர் ராஜவேலு தலமையிலான தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
Next Story