தசரா : பொதுமக்கள் கடைபிடிக்க நெறிமுறைகள் - எஸ்பி அறிவிப்பு
Thoothukudi King 24x7 |7 Oct 2024 4:50 AM GMT
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ளார். .
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு நடைபெறும் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 03.10.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 12.10.2024 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும். இதனையடுத்து 13.10.2024 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள். 1.திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, ஜாதி ரீதியான பனியன் மற்றும் உடைகளை அணிந்து வரவோ, ஜாதி தலைவர்கள் போன்று வேடமிட்டு வரவோ, காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ அனுமதி இல்லை. 2.உலோகத்திலான வேல், சூலாயுதம், வாள் போன்ற ஆயதங்கள் கொண்டு வருதல் கூடாது. 3. தசரா திருவிழாவின்போது தசரா குழுவினர் பக்தி பாடல்களை தவிர சாதி ரீதியான பாடல்களோ, இசையோ இசைப்பதற்கு அனுமதி இல்லை. அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் நடத்திட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Next Story