தசரா விழாவை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்:
Thoothukudi King 24x7 |7 Oct 2024 5:15 AM GMT
தசரா விழாவை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடியில் தசரா விழாவை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்: ஏராளமானோர் பங்கேற்பு. தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு தசரா விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காளி, பத்திரகாளி அம்மன், மாடன், கருப்பசாமி, என பல்வேறு வேடங்கள் அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். தூத்துக்குடி ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டு தோறும் தூத்துக்குடியில் தசரா விழாவை முன்னிட்டு காளி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பு துவங்கிய ஊர்வலம், பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பஸ் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் முன்பு நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் வேடமணிந்த காளிகள் பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தி சென்றனர். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story