வெள்ளகோவிலில் திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

X
வெள்ளகோவில் திமுக அலுவலகத்தில் திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ராசி முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், மாவட்டம் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள் லதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்களை சேர்ப்பது,வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முடிவில் மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை படிவம் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு 5000 புது உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கூட்டத்தில் வெள்ளகோவில் ஒன்றியம், நகரம், முத்தூர் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

