நாமக்கல்: சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் போராட்டம்!

ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமையில் கண்ணில் கருப்பு துணி கட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு சிப்காட் தொழில்பேட்டை அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் ஒன்றிணைந்து சிப்காட் எதிர்ப்பு குழு அமைத்து 70க்கும் மேற்பட்ட பல்வேறு கட்ட எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர், இந்நிலையில் திங்கட்கிழமை 50 க்கும் மேற்பட்டோர் சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமையில் கண்ணில் கருப்பு துணி கட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், ராமசாமி, தண்டபாணி, ரவி மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை முன்னிலை நிறுத்தி தார்மீக அடிப்படையில் சிப்காட் கூடாது வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்ன கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story