நாமக்கல்: த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை மாநில துணைத் தலைவர் விடியல் சேகர் துவக்கி வைத்தார்!

மாவட்டத் தலைவர் கோஸ்டல் இளங்கோ தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர் உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை மாநில துணைத் தலைவர் விடியல் சேகர் துவக்கி வைத்தார். நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கோஸ்டல் இளங்கோ தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட மேலிட பார்வையாளர் விஜயகுமார், மாவட்டத் துணைத்தலைவர் பெருமாள்,துணைச் செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் வட்டார தலைவர்கள் சின்னுசாமி, பாஸ்கரன், ராமன் மற்றும் நகர தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் பரமத்தி வேலூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நாமக்கல் மாநகர தலைவர் சக்தி வெங்கடேஷ் நன்றி கூறினார்.
Next Story