நாமக்கல்: மின் நுகர்வோர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்!

சென்னை CAG ஆராய்ச்சியாளர் பரத்ராம் மின் சிக்கனம்... மின் பொருட்கள் பாதுகாப்புடன் பயன்படுத்துவது. தரமான மின் பொருட்கள் வாங்குவது குறித்து விளக்க உரை ஆற்றினார்.
சென்னை சிஏஜி மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் நாமக்கல்லில் மின் நுகர்வோர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார்.நாமக்கல் கவிஞர் பேரவை தலைவர் முனைவர் மோகன் வரவேற்றார், நாமக்கல் மாவட்ட தனியார் மின் பணியாளர்கள் சங்க தலைவர் ராஜி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் கையேடுகளை வெளியிட்டார்.பத்து ரூபாய் இயக்கம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் நிகழ்ச்சி துவக்கி வைத்து பேசினார். சென்னை சிஏஜி ஆராய்ச்சியாளர் பரத்ராம் படக்காட்சிகள் மூலம் மின் சிக்கனம்... மின் பொருட்கள் பாதுகாப்புடன் பயன்படுத்துவது..தரமான மின் பொருட்கள் வாங்குவது குறித்து விளக்க உரை ஆற்றினார்.ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர் ஜெயராமன் மின் நுகர்வோர் குறைகள் தீர்க்க ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின் நுகர்வோர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து ஆலோசனை வழங்கப்பட்டது. நுகர்வோர் உரிமைகள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் பத்து ரூபாய் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
Next Story