நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேரணி ஆர்ப்பாட்டம்..
Rasipuram King 24x7 |7 Oct 2024 3:11 PM GMT
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேரணி ஆர்ப்பாட்டம்..
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் பொறுப்பற்று பேசும் மத்திய அமைச்சர்களை கண்டித்து நடை பயண பேரணி மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. நடைப்பயணம் நாமக்கலில் தொடங்கி மாலை ராசிபுரம் வந்தடைந்தது இதில் ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கம் வேண்டி சாதிவாரி கணக்கு நடத்த கோரியும் நாமக்கல் கிழக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபயணம். நாமக்கலில் துவங்கியது நடைபயண பேரனியானது நாமக்கல் நகரில் முக்கிய வீதி வழியாக வந்து கொசவம்பட்டி, அண்ணா நகர் .அலங்காநத்தம் பிரிவு சாலை, பழையபாளையம், முத்துக்காப்பட்டி, சேர்ந்தமங்கலம், காளப்பா நாயக்கன்பட்டி பேளு குறிச்சி வழியாக மாலை ராசிபுரம் வந்தடைந்தது ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்த நிலையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வழியுறுத்தியும் மத்திய பிஜேபி அரசியன் வன்முறையும் மற்றும் மத்திய அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருவது கண்டித்தும் கண்டன கோசங்கள் எழுப்பினர். இந்த எழுச்சி பேரணியில் மாநில துணைத்தலைவர் டாக்டர் செழியன் முன்னாள் மாவட்ட தலைவர் பார்சல் சீனிவாசன் ,வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம்,முன்னாள் மகளிர் மாவட்ட தலைவர் கலைசெல்வி ராசிபுரம் நகரத் தலைவர் ஸ்ரீராமுலு முரளி, நாமக்கல் நகர தலைவர் மோகன் ,பொதுக்குழு உறுப்பினர் மெய்ஞானமூர்த்தி, இராசிபுரம் நகர செயலாளர் கோவிந்தராஜ், நகர பொருளாளர் மாணிக்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
Next Story