பொன்னியம்மன் கோவில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
Arani King 24x7 |7 Oct 2024 3:50 PM GMT
ஆரணி அக். 8- சேத்துப்பட்டு அடுத்த இடையன் குளத்தூர் கிராமத்தில் கிராம தேவதை அருள்மிகு பொன்னியம்மன் கோயில் அகற்றி புதிய கோவில் அமைக்க போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
சேத்துப்பட்டு அடுத்த இடையங்கெளத்தூர் கிராமத்தில் கிராம தேவதையான பொன்னியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை பட்டியலில் துறை உருவான காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இந்த கோயில் மிகவும் பழுதடைந்த நிலையிலும், கட்டிடங்கள் உறுதித்தன்மை அற்றும் காணப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கோயில் கட்டலைதாரர்கள் கோயிலை பிரித்து புதிதாக திருப்பணி செய்துதர இந்து அறநிலையத்துறையிடம் கோரிக்கை வைத்தனர். இதையேற்ற இந்து அறநிலையத்துறை கோயிலின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய ஆய்வாளர்கள் செய்யாறு முத்துசாமி, போளூர் ராகவேந்தர், ஆரணி மணிகண்டபிரபு, வந்தவாசி கணிக்குமார், தொல்லியல் துறை வெங்கடேசன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. குழு ஆய்வு செய்ததில் கோயில் உறுதித்தன்மை அற்ற நிலையில் உள்ளது, அதை அகற்றி புதிதாக கட்டவேண்டும் என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் ரூ. 94 லட்சத்தில் உறுதித்தன்மை அற்ற கோயிலை அகற்றி புதிதாக கட்டுமானப்பணி செய்ய சட்டாபை 23 - 24 நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் டிஎஸ்பி மனோகரன் உத்தரவின் பேரில் சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், ஆனந்தன், வேலு என மொத்தம் 25 போலீசார் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆய்வு குழுவினர் கோயிலை அகற்ற ஜேசிபி உடன் கோயிலுக்கு சென்றனர். அப்போது பெரும்பாலான பொது மக்கள் மற்றும் கட்டலைதார்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஒரு கட்டலைதாரர்கள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோயில் எங்கள் நிலத்தில் உள்ளதால் இது எங்களுக்கு சொந்தமான கோயில் என கூறி கோயில் அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அவர்கள் இதுவரை இந்த கோயில் இந்து அறநிலையத்துறை பட்டியலில் இருந்தது எங்களுக்கு தெரியாது. நாங்கள் இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அவகாசம் கொடுக்க கேட்டனர். ஆனால் கோர்ட் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து போலீசார் பாதுகாப்பில் பழைய கோயில் கட்டிடத்தை ஜேசிபி மூலம் அதிகாரிகள் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Next Story