பா.ஜ.க. சார்பில் தீவிர  உறுப்பினர் சேர்க்கை முகாம், ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம், ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம், ஆலோசனை கூட்டம் மாவட்ட பொது செயலர் வழக்கறிஞர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் நடந்த முகாமில் மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம்  சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினர். பள்ளிபாளையம் சாலை, பொன் செல்லம்மாள் மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்று தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினர். மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story