மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவர்களுடன் பேருந்தில் உற்சாகப் பயணம்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, நீட்டிக்கப்பட்ட நகரப் பேருந்து புதிய வழித்தடத்தில் சுமார் 4.5 கி.மீ பள்ளி மாணவ, மாணவியர்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, குருக்கலாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட ஆட்சியர் இன்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் மற்றும் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காளிப்பட்டி முதல் குருக்கலாம்பாளையம் (தடம் எண்: R22) வரையிலான பேருந்தின் புதிய வழித்தடத்தினை நீட்டிப்பு செய்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து திட்டங்களும் ஏழை, எளியோர், மாணவ, மாணவியர்கள் மற்றும் மகளிர் என அனைவரும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, குருக்கலாம்பாளையத்தில் இருந்து மல்லசமுத்திரம் பேரூராட்சி பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) சார்பில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தினை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவியர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்து புதிய வழித்தடத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து, அவர்களுடன் பள்ளிக்கு பேருந்தில் சுமார் 4.5 கி.மீ பயணம் செய்தார்கள். இப்பேருந்து காளிப்பட்டி முதல் குருக்கலாம்பாளையம் வரை சுமார் 2.5 கிமீ தொலைவிற்கு நீட்டிக்கப்பட்டு பேருந்து எண்: TN30N0959, தடம் எண்: R22 குருக்கலாம்பாளையத்திற்கு காலை 08.20 மணிக்கும் மேலும் மாலை 4.35 மணிக்கும் மல்லசமுத்திரம் பள்ளிக்கு சென்று வர பேருந்து இயக்கப்பட உள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேருந்து வழித்தடத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் மற்றும் நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோருக்கு மாணவ, மாணவியர்கள் நன்றி தெரிவித்தனர். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை தடையின்றி, தாமதமின்றி வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் குருக்கலாம்பாளையம் பகுதியைச் சார்ந்த கிராம மக்கள், மாணவ, மாணவியர்கள் என அனைவரும் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தமைக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மல்லசமுத்திரம் பேரூராட்சி தலைவர் எம்.திருமலை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story