கல்லூரி தலைவருக்கு சிறந்த தேசிய பெண் நூலகர் விருது

கல்லூரி தலைவருக்கு சிறந்த தேசிய பெண் நூலகர் விருது
சிறந்த தேசிய பெண் நூலகர் விருது
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் தலைவர் முனைவர் பாத்திமா பீவிக்கு சாலிஸ் அமைப்பின் சார்பாக சிறந்த தேசிய பெண் நூலகர் விருது வழங்கப்பட்டது. கோயம்புத்தூரில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவரை கல்லூரி முதல்வர் அப்துல் காதர் நேற்று கௌரவித்து வாழ்த்தினார்.
Next Story