திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
Tiruchengode King 24x7 |8 Oct 2024 8:38 AM GMT
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் விலைவாசி உயர்வு சொத்து வரி குடிநீர் கட்டணம் உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை சரியாக செயல்படுத்தாத திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அதிமுகவினர் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்செங்கோடு அதிமுக நகர கழக செயலாளர் அங்கமுத்து மனித சங்கிலி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத ஆளுகின்ற அரசை கண்டித்தும் சொத்து வரி குடிநீர் கட்டணம் போன்ற பல்வேறு வரிகளை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு வழி வகுத்த அரசை கண்டித்தும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது அண்ணா சிலை முதல் ஓம் காளி அம்மன் கோயில் வரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்
Next Story