செந்தில் பாலாஜி மீண்டும் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரானார்.

செந்தில் பாலாஜி மீண்டும் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரானார்.
செந்தில் பாலாஜி மீண்டும் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சரானார். கடந்த 2021 ஆம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தமிழக மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது கொரோனா காலமாக இருந்ததால், கொரோனா எதிர்ப்பு தீவிர நடவடிக்கைக்காக கரூர், சேலம் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியை திறம்பட மேற்கொண்டு செயலாற்றினார். இதனால் உள்ளாட்சித் தேர்தலின் போது கரூர் மற்றும் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தனது பொறுப்புகளை திறம்பட மேற்கொண்டு கரூர் மற்றும் கோவை மாவட்டங்களை திமுக வசமாக்கினார். அதன் பிறகு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக விசாரணை கைதியாக சிறைவாசம் சென்று மீண்டும் ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அவர் வகித்து வந்த துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் கரூருக்கு வந்த அவருக்கு கரூர் மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு செய்ததை தொடர்ந்து கரூர், கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகள் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story