அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நீக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நீக்கம்
ஆர் எஸ் எஸ் பேரணியை துவக்கி வைத்த எதிரொலி
அதிமுக அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த  இரு தினங்களுக்கு முன் குமரியில் ஆர் எஸ் எஸ்  பேரணியை அவர் தொடங்கி வைத்திருந்தார். இதனால் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. "கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் நீக்கம்" என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.            மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழக பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுக்க முக்கிய காரணியாக இருந்தவரும் தளவாய் சுந்தரமே.       எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி உத்தரவால் மூத்த நிர்வாகிகள் கலங்கியுள்ளனர். ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் தளவாய் சுந்தரம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதை காட்டிலும் அவர்கள்தான் இவருடன் தேடி வந்து நெருக்கம் காட்டுவதாக உள்ளூர் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.         இந்நிலையில், தளவாய் சுந்தரம் எம் எல் ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் -  என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. நீக்கப்பட்டுவிட்டால் ஓகே ரைட் என சொல்ல வேண்டியது தான் என அவர் கூறியுள்ளார்.        ஏற்கெனவே தளவாய் சுந்தரம்  பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Next Story