திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து கோர விபத்து!

திருப்பூர் பாண்டியன் நகர், பொன்னம்மாள் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 9 மாத பெண் குழந்தை உட்பட மூன்று பேர் பலி!
கோவில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு 9 பேர் தீவிர சிகிச்சை. திருப்பூர் பாண்டியன் நகர் சத்யா காலனி பொன்னம்மாள் நகர் பகுதியில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி சத்யபிரியா உடன் வசித்து வருகிறார். சத்யபிரியாவின் சகோதரர் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கோவில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயார் செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். திருவிழா காலம் என்பதால் அதிகளவிலான ஆர்டர்கள் இவருக்கு குவிந்துள்ளது இதன் காரணமாக சகோதரியான சத்திய பிரியாவின் வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கு முறையான அனுமதி எதுவும் பெறாத நிலையில் குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் சட்டவிரோதமாக இவர் பட்டாசு தயாரித்து வந்தது. தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது நாட்டு வெடிமருந்துகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் அடையாளம் தெரியாத பின் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார் இவரது உடல் பாகங்கள் 100 மீட்டர் தொலைவிற்கு வீசப்பட்டது மேலும் கார்த்திக் வீட்டின் முன்புறம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது வீட்டின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மளிகை கடை ஒன்றும் முற்றிலும் சேதம் அடைந்தது மேலும் எதிர் புறமாக இருந்த 20 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்து ஓடுகள் முழுவதும் உடைந்து நொறுங்கியது பெரும் சப்தம் கேட்ட நிலையில் அப்பகுதி முழுவதும் நில நடுக்கம் போல பூமி அதிர்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருமுருகன் பூண்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர் மேலும் வெடிக்காமல் ஏராளமான வெடிபொருட்கள் சிதறி கிடந்ததால் பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த படி விபத்தில் அடையாளம் தெரியாத பெண் 9 மாத குழந்தை ஆலியா செர்ரின் , காயமடைந்து சிகிச்சையில் பெற்று வந்த குமார் எனக்கு மூன்று பேர் உயிரிழந்தனர் மேலும் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகர காவல் ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வெடிக்காமல் உள்ள பொருட்கள் மீது தண்ணீர் அடித்து அமைப்பு பணியை தொடருமாறு உத்தரவிட்டனர் இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரித்த சம்பவம் தொடர்பாகவும் வெடி மருந்துகளை சேகரித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் பெயர் விபரம் 1.மனு குமாரி(7) 2.தாணு(10) 3.ஹன்சிகா குமாரி 4.ஹர்திக் குமார்(5) 5.பெருமாள்(60), 6.செல்வி(45), 7.சுப்பிரமணி(75) 8.சம்பா சாய்த்ரி(20) 9.சத்தியபிரியா(40), 10.சந்திரா(55)
Next Story