நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை.

பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியே செல்லும் வகையில் கட்டமைப்பினை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி ஒன்றியம், கூடச்சேரி பஞ்சாயத்து, மேலப்பட்டி அருந்ததியர் காலணியில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவு நீர் வெளியே செல்லும் வகையில் கட்டமைப்பினை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வீதிகளை புதுப்பித்து முறையாக தார் சாலைகளுக்கு சென்று சேரும் வகையில் இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், நடுவே மின் கம்பம் இருப்பதனால் வீதியை முறையாக போடாமல் மேலோட்டமாக காங்கிரட் வீதி அமைத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழை நீரானது முறையாக வெளியேறாமல் தேங்கி மிகப்பெரிய துர்நாற்றம் வீசுவது மட்டும் இல்லாமல் நோய் தொற்று பரவும் வகையில் மிகப்பெரிய அளவிற்கு தேங்கி, கொசு உற்பத்தியாகி பெரும் அவதிக்குள்ளாக கூடிய அளவிற்கு கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளன. எனவே வீதிகளையும் புதுப்பித்து கழிவுநீர் வெளியே செல்லும் வகையிலும், குறுக்கே இருக்கக்கூடிய மின்கம்பத்தை இடமாற்றம் செய்து காங்கிரட் வீதிகளை முறையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் பட்டியலின மக்களின் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 110 விதியின் கீழ் கட்டாய கடமையாக கருதி பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய தாங்கள் கழிவு நீரால் நோய் தொற்று வராத வகையில் மிகத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சியின் பரமத்தி ஒன்றிய செயலாளர் மணிவேல் தலைமையில் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது களத்தில்: குமாரசாமி கிளைச் செயலாளர் கதிரேஷ் கிளை பொறுப்பாளர் வரதராஜ் பொறுப்பாளர் மற்றும் லட்சுமி, சித்ரா அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story