ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட மையத்தின் சார்பில் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஒன்றிய ராம் மாநில துணைத்தலைவர் செல்வராணி முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகம், எம்ஆர்பி செவிலியர் ஆகியோர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டபூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கும், கிராம உதவியாளர் வாரிசுகளுக்கும், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் ஒப்பந்தம் புற ஆதார முறை நியமன முறைகளை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story