அதிமுக சார்பில் பட்டணம் பேரூர் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் ஏராளமானோர் பங்கேற்பு..

அதிமுக சார்பில் பட்டணம் பேரூர் பகுதியில் மனித சங்கிலி போராட்டம்  ஏராளமானோர் பங்கேற்பு..
அதிமுக சார்பில் பட்டணம் பேரூர் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் ஏராளமானோர் பங்கேற்பு..
தமிழ்நாடு முழுவதும் அதிமுக மனித சங்கிலி போராட்டம் பட்டணம் பகுதியில் ஏராளமானோர் பங்கேற்பு. தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலையேற்றம் ஆகியவற்றை கண்டித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டணம் பேரூர் கழகத்தின் சார்பில் பேரூர் கழக செயலாளர் கே. பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் பட்டணம் சந்தை அருகே அதிமுக தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் KPS, சுரேஷ்குமார் கலந்து கொண்டு தமிழக அரசின் அவலநிலை குறித்து எடுத்துப் பேசி கண்டன உரை ஆற்றினார். தொடர்ந்து தமிழகத்தில் மின் கட்டணம், சொத்து வரி, பத்திர பதிவு கட்டணம், குடிநீர், கழிவு நீர் கட்டணம் ஆகியவை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மனித சங்கிலி போராட்டத்தை அதிமுகவினர் நடத்தினர் . அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து பதாகங்களை ஏந்தி அதிமுகவினர் கோஷமிட்டனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, அதிகார துஷ்பிரயோகம், மூன்று முறை மின்கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை குறிப்பிட்டும், சிறுமியருக்கு அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள், தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு, உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களிடத்தில் கோஷங்கள் எழுப்பி எடுத்து கூறினர். இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் K. பாலசுப்ரமணியம் , ஒன்றிய துணைச் செயலாளர் சின்னப் பையன் என்கின்ற முத்துசாமி , பாலன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வடுகம், கருப்புசாமி, PACPEXதலைவர் வேலம்பாளையம் பட்டணம் எஸ், பழனிவேல் பேரூர் துணைச் செயலாளர், மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களும் பேரூர் பொறுப்பாளர்களும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story