ராசிபுரம் அருகே அரசு பேருந்து சாலையோர சுவற்றில் மோதி விபத்து பயணிகள் அவதி..

ராசிபுரம் அருகே அரசு பேருந்து சாலையோர சுவற்றில் மோதி விபத்து பயணிகள் அவதி..
ராசிபுரம் அருகே அரசு பேருந்து சாலையோர சுவற்றில் மோதி விபத்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நகரப் பேருந்து நோக்கி அரசு பேருந்தானது சென்று கொண்டிருந்தது. பேருந்தானது கட்டனாச்சம்பட்டி, குட்டலாடம்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட வழியாக சேலம் சென்றடையும். மாலை 6.15 மணி அளவில் 52Fஅரசு பேருந்து பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். பேருந்தானது கட்டனாச்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது குறுகிய சாலை என்பதால் அதிவேகமாக வந்த மினிலாரிக்கு அரசு பேருந்து ஓட்டுனர் நவீன்(29) பேருந்தை இடது புறமாக திருப்ப முயன்ற போது சாலையோர சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் உள்ள இருந்த மாணவ, மாணவிகள் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தில் இருந்து அனைவரையும் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போக்குவரத்து பணிமனை மேலாளர் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு பயணிகளுக்கு 67A என்ற மாற்று பேருந்து வர வைத்தனர். மாற்று பேருந்தானது வந்து கொண்டிருந்தபோது கோரைக்காடு அருகே எதிரே ஜேசிபி வாகனம் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது புறம் இறக்கி உள்ளார். ஜேசிபி சென்ற பின் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை எடுக்க முயன்றபோது பேருந்தானது சேற்றில் சிக்கிக் கொண்டது.பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை தள்ளி முயற்சி செய்தும் சிறிதும் பேருந்து நகராததால் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடிய ஜேசிபி இயந்திரம் உதவியுடன் பேருந்தை வெளியே மீட்டனர். அரசு பேருந்து சாலையோர சுற்றுசுவர் மீது மோதிய விபத்து உள்ளன நிலையில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்புவதற்காக வந்த பேருந்தும் வழியில் சிக்கிக் கொண்டதால் பயணிகள் அனைவரும் நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது...
Next Story