ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக் கோரியும் , மின்னணு ஏலம் நடைபெறுவதை நிறுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் மனு..

ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக் கோரியும் , மின்னணு ஏலம் நடைபெறுவதை நிறுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் மனு..
ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக் கோரியும் , மின்னணு ஏலம் நடைபெறுவதை நிறுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் மனு..
ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் இடமாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர், அமைப்புகள் பங்கேற்று பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யக்கூடாது என தொடர்ந்து போராடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக அண்மையில் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நகராட்சியில் கருத்து கேட்புக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில், ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க இடம் தேவைப்படுவதால் சரியான இடத்தில் 7 ஏக்கர் யாராவது தானமாக கொடுத்தால், பேருந்து நிலையம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நாளிலேயே அணைப்பாளையம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ஒருவரிடமிருந்து தானமாக பெறப்பட்டதால், பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பு எழுந்தது. நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே இடம் தேர்வு செய்துவிட்டு தேவையில்லாமல் கருத்துக் கேட்பு கூட்டம் கண்துடைப்புக்காக நடத்தியுள்ளது என பலரும் குற்றம் சாட்டினர். நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்ட அணைப்பாளையம் பேருந்து நிலையம் அமைக்க ஏற்ற இடமில்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராசிபுரம் நகரின் தொழில், வர்த்தகம் பாதிக்கும் என கூறினர். இந்நிலையில், பல்வேறு கட்சியினர், சங்கங்கள், வியாபாரிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில். மேலும் இதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சின்னம்மா சசிகலா அவர்களின் சார்பில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என் கோபால் அவர்கள் 15. 7.2024 இரண்டு மாதத்துக்கு முன்பு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் கட்சி நிர்வாகிகள் உடன் சென்று பேருந்து இடம் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தார். தொடர்ந்து இது சம்பந்தமாக சின்னம்மா அவர்களை நேரில் சந்தித்தும் பேருந்து நிலையம் மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கி கோரிக்கை மனு வழங்கினார். தற்போது வருகின்ற 21.10.24 அன்று ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடம் மாற்றி புதிதாக அமைப்பதற்கான மின்னணு ஏலம் நடைபெறுவதாக தகவலின் பெயரில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா அவர்களை திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் முகாமில் சந்தித்து மீண்டும் மனு வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகிகள் இடத்தில் விளக்கி கூறினார். தனிநபர் ஒருவரின் சுயலாபத்திற்காக இதுபோன்ற பேருந்து நிலையம் மாற்றப்பட்டால் பலர் பாதிப்படைவார்கள் என்றும் ஆளும் கட்சியின் அராஜக போக்கால் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் அவர்கள் செய்தியாளர்கள் இடம் பேட்டி அளித்தார்.
Next Story