ஆண்டிபட்டியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனிதச்சங்கிலி போராட்டம் .
Andippatti King 24x7 |8 Oct 2024 2:48 PM GMT
சொத்துவரி உயர்வை கண்டித்தும் , மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் , ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் , சொத்துவரி உயர்வு , மின்சார கட்டணம் உயர்வு , அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் ஆண்டிபட்டியில் அதிமுகவினர் மனிதச்சங்கிலி போராட்டம் . தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் கழக செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இன்று தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு , மின்சார கட்டணம் உயர்வு , சொத்து வரி உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் தமிழக அரசால் தற்போது உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வை கண்டித்தும் , மின்சார கட்டண உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் , சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் வரிசையாக ஒருவர் கையை ஒருவர் பிடித்து மனித சங்கிலியாக கைகளில் அதிமுக கொடிகளை ஏந்தியபடி நின்று ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story