நாகுடி அருகே இளைஞர் மாயம் - தந்தை புகார்!

நாகுடி அருகே இளைஞர் மாயம் - தந்தை புகார்!
காணவில்லை
நாகுடி அருகே துவரம் பால்புரம்-சேர்ந்தவர் தங்கையா இவரது மகன் பாண்டியன் (22). தந்தையுடன் வெகு நாட்களாக மனக்கசப்பு இருந்து வந்ததாக தெரிகிறது. குடிபோதையில் இருந்த பாண்டியனை தந்தை கண்டித்ததால் மனக்கசப்படைந்தார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் நாகுடி சார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story