மீண்டும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் : பஸ் நிலையத்தை மறைத்த அவலம்
Thoothukudi King 24x7 |9 Oct 2024 7:48 AM GMT
தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகளால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து அபாயம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டிஜிட்டல் போர்டு பிரதான சாலையில் வைக்க கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அதனையும் மீறி தூத்துக்குடியில் போக்குவரத்து மிகுந்த, நகரின் பிரதான சாலையான ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தை மறைக்கும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களால் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோரின் கவனம் சிதறி விபத்துக்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற டிஜிட்டல் பேனர்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story