ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
Andippatti King 24x7 |9 Oct 2024 10:50 AM GMT
பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையில் ரூ.15,200 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது.
ராஜதானி அருகே கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.ஆண்டிபட்டி அருகே ராசக்காள்பட்டியை சேர்ந்த சௌந்திரபாண்டி 27, தெப்பம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் 32, ஆகியோர்களின் பெட்டிக்கடைகளில் நடத்திய சோதனையில் ரூ.15,200 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்த ராஜதானி போலீசார் இருவரையும் கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story